Saturday, July 18, 2009

தங்கமணி அசடுவழிந்த கதை

தங்கமணியும் என் அக்காவும் ஒரு நாள் மின்சார ரயிலில் செல்லும் போது நடந்த விசயம் இது...

இருவரும் மகளிருக்கான இருக்கைகள் இருக்கும் பெட்டியில் மதிய நேரத்தில் ஏறி அமர்ந்து எழும்பூரில் இருந்து நங்கைநல்லூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது கோடம்பாக்கம் ரயில் நிலையம் தாண்டியவுடன் ஒருவர் மிக அழகாக உடை உடுத்திக் கொண்டு, மின்சார வண்டி கிளம்பும்போது ஓடிவந்து அந்த பெட்டியில் ஏறினார்.

எங்க தங்கமணி வழக்கம்போல் டென்ஷன் ஆகி..

மிஸ்டர்... இது லேடிஸ் கம்பார்ட்மெண்ட்... இதில் நீங்க எல்லாம் ஏறக்கூடாது என்று தமிழில் சொன்னார்...

அவர் அதற்கு தலையை ஆட்டிவிட்டு ...


|
|
|
|
|
|
|
|
|
|
|
|

மேடம் டிக்கெட் ப்ளீஸ்...


என்றார்.

5 comments:

  1. ஓ... இதுக்குத்தான் இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்களா !!!!

    ReplyDelete
  2. எழுதுங்க இன்னும் எழுதுங்க
    நல்லா இருக்கு :))

    ReplyDelete
  3. மயிலாட்டம், ராகவன் சாரின் மெயில் படித்தவுடன் உடனடியாக உங்க பதிவை எட்டிப் பார்த்தேன். முதல் பதிவே ரகளை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா


    நல்ல அசடு வழிஞிங்

    ReplyDelete