Wednesday, July 22, 2009

பேய், பிசாசு வுடன் தங்கமணி

இது தங்கமணி கல்லூரியில் படிக்கும் போது நடந்த சம்பவம் ....

தங்கமணி அப்போது சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார்கள்.. (உங்களுக்கு அவங்களை அப்பவே தெரியுமான்னு அப்படின்னு கேட்ககூடாது... தெரியும்... ஆனா தெரியாது..)

முதலில் என் தங்கமணியைப் பற்றிச் சொல்லிவிடுகின்றேன்... பேய், பிசாசு அப்படின்னு சொன்னாலே பேய் பயம் பயந்துகுவாங்க...

அவங்க செஞ்சிக்குக் பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்கு, கோடை விடுமுறைக்காக சென்று இருந்தார்கள். அவங்களுடைய தந்தையார் அங்கு வேலையில் இருந்ததால் அப்படி...

அவங்களுடைய தம்பிக்கு அப்போது அம்மை போட்டு இருந்தது. கொஞ்சம் சீரியசாகவே இருந்தது...

அவர்கள் இருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் இருந்தது. அந்த அம்மன் கோயிலுக்கு கதவுகள் கிடையாது. ஆனால் அந்த கோயிலில் அம்மனுக்கு பின்னாடி ஒரு கண்ணாடி வைத்து இருக்ப்பார்கள். அதில் ஒரு விளக்கு பொருத்தப் பட்டிருக்கும். அதில் இருந்து வரும் வெளிச்சம், அந்த தெருவில் இவர்கள் வீட்டிற்கும், எதிர்த்த வீட்டிற்கும் தெரியும். அப்போது அந்த கிராமத்தில் மின்சாரப் புழக்கம அவ்வளவாகக் கிடையாது என்பதையும் மனதிற்க் கொள்க.

ஒரு நாள் இரவு, தம்பிக்கு உடல் நிலை ரொம்ப மோசமான நிலையை அடைந்து, மிகவும் அதிகமாக முனகிட்டு இருந்திருக்கார். இவங்களுக்கு தூக்கம் வரவில்லை. அவங்களோட அம்மாவைக் கூப்பிட்டு, அம்மா தம்பி ரொம்ப முனகுகின்றான் என்று சொல்லியிருக்காங்க. அவங்களும் சும்மா இரும்மா, அம்மை வந்தால் அப்படித்தான், கவலைப்படாதே என்று சொல்லியிருக்காங்க.

அப்போதுதான் தெருவில் நாய் குலைத்து இருக்கு. இவங்களுக்கு பயங்கர உதறல். எதிர்த்த வீட்டை கண் முழுச்சு பாத்து இருக்காங்க. அங்க ஒரு ஒரு கருப்பு உருவம் படுத்துகிட்டு இருக்கு. போத குறைக்கு, வெள்ளையா எதோ நின்னுகிட்டு இருக்கு. அம்மணிக்கு கேட்கவா வேண்டும். ஏற்கனவே பயந்தாங்கொள்ளி வேற.

அம்மாவை எழுப்பி, அம்மா எதிர்த்தா மாதிரி, ஒரு வெள்ளை முனி நிக்குது, கறுப்பு பிசாசு படுத்துகிட்டு இருக்கு அப்படின்னு எப்போதும் போல் உளற ஆரம்பிச்சுட்டாங்க. மேலும் அவங்க அம்மாகிட்ட, அம்மா நாய் குலைக்குது, நாய்களுக்கு பேய், பிசாசு வருவது தெரியும் அப்படின்னு சொல்லுவாங்க அப்படின்னு பேத்த ஆரம்பிச்சுட்டாங்க.

அம்மா பயங்கர டென்ஷனா ஆகி, எழுந்து எதிரித்த வீட்டுக்குப் போய், “ டேய் சின்னத்தம்பி (அவர் 6 அடி உசரம் இருப்பாரு) உள்ளப் போய் படு, பாப்பா பயப்படுதுன்னு” அப்படின்னு அம்மா சொல்லவும், சின்னதம்பி தன்னுடைய கருப்பு கலர் போர்வையை சுருட்டிகிட்டு உள்ளப் போய் படுத்துகிட்டார்.

சரி வெள்ளைக் கலர் என்னத் தெரியுமா? அம்மன் கோயிலில் வெள்ளை அடிச்சு இருக்காங்க. அடிப்பதற்கு முன், அந்த காலத்தில் சுண்ணாம்பு, நீலக் கலர் பொடி கலந்து தானே அடிப்பாங்க, அதுக்காக சின்னத்தம்பி வீட்டில் ஒரு டெஸ்ட் அடிச்சுப் பார்த்து இருக்காங்க. அது நேராக ஒரு கோடு அவ்வளவுதான்.

இந்த தங்கமணியைப் பார்த்து நான் தான் ரொம்ப பயந்துகிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னா யாராவது நம்புவீங்களா?

Saturday, July 18, 2009

தங்கமணி அசடுவழிந்த கதை

தங்கமணியும் என் அக்காவும் ஒரு நாள் மின்சார ரயிலில் செல்லும் போது நடந்த விசயம் இது...

இருவரும் மகளிருக்கான இருக்கைகள் இருக்கும் பெட்டியில் மதிய நேரத்தில் ஏறி அமர்ந்து எழும்பூரில் இருந்து நங்கைநல்லூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது கோடம்பாக்கம் ரயில் நிலையம் தாண்டியவுடன் ஒருவர் மிக அழகாக உடை உடுத்திக் கொண்டு, மின்சார வண்டி கிளம்பும்போது ஓடிவந்து அந்த பெட்டியில் ஏறினார்.

எங்க தங்கமணி வழக்கம்போல் டென்ஷன் ஆகி..

மிஸ்டர்... இது லேடிஸ் கம்பார்ட்மெண்ட்... இதில் நீங்க எல்லாம் ஏறக்கூடாது என்று தமிழில் சொன்னார்...

அவர் அதற்கு தலையை ஆட்டிவிட்டு ...


|
|
|
|
|
|
|
|
|
|
|
|

மேடம் டிக்கெட் ப்ளீஸ்...


என்றார்.

Friday, July 17, 2009

முதல் இடுகை

இது எனது முதல் இடுகை
விரைவில் ரம்பம் ஆரம்பம்
உங்களது மேலான ஆதரவை நாடும்
மயிலாட்டதின் கொண்டாட்டம்